2 கன்றுகளை ஈன்ற பசு

கோபி : கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில்  அருகே ஒரே பிரசவத்தில் 2 பெண் கன்றுகளை ஈன்ற பசுமாடு - பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த  பகுதியை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் தனது வீட்டில் 8 மாடுகள் வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். இதில் ஒரு பசு மாடு சினையாக இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 2 பெண் கன்று குட்டிகளை ஈன்றது. இதனால் பசுவின் உரிமையாளர் ராமசந்திரன் குடும்பத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த தகவல் கொங்கர்பாளையம், வினோபா நகரை சுற்றியுள்ள மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் ஒரே பிரசவத்தில் 2 பெண் கன்று குட்டிகளை ஈன்ற பசுவையும், கன்றுகளையும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

Related Stories: