×

இலங்கையுடன் ஒருநாள் தொடர்: வங்கதேச அணியில் மீண்டும் ஷாகிப்

தாக்கா: இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள வங்கதேச அணியில், காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் இடம் பெற்றுள்ளார். வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நாளை பகல்/இரவு ஆட்டமாக நடக்கிறது. 2வது போட்டி 25ம் தேதியும், 3வது மற்றும் கடைசி போட்டி 28ம் தேதியும் இதே மைதானத்தில் நடக்க உள்ளன. இந்த தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து டூரில் இடம் பெறாத ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நஜ்முல் உசேன் ஷான்டோ, அல் அமின் உசேன், ஹசன் மகமூத், ருபெல் உசேன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தமிம் இக்பால் தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.வங்கதேசம்: தமிம் இக்பால் (கேப்டன்), லிட்டன் தாஸ், ஷாகிப் ஹசன், முஷ்பிகுர் ரகிம், முகமது மிதுன், மகமதுல்லா, ஆபிப் உசேன், மெஹிதி ஹசன் மிராஸ், முகமது சைபுதின், தஸ்கின் அகமது, முஸ்டாபிசுர் ரகுமான், சவும்யா சர்கார், மொசாடெக் உசேன், மெகதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம்….

The post இலங்கையுடன் ஒருநாள் தொடர்: வங்கதேச அணியில் மீண்டும் ஷாகிப் appeared first on Dinakaran.

Tags : day ,Sri ,Lanka ,Shakib ,Bangladesh ,Takka ,Sri Lanka ,Shahib ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...