×

ஸ்டேன் சாமி மரணம் - மத்திய அரசை கண்டித்து சென்னையில் போராட்டம்

சென்னை: மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி மரணத்தில் நீதி கேட்டு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி இணைந்து இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். அதில் சென்னையில் ஒரு பகுதியாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்று வரக்கூடிய ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதானமாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனித உரிமை ஆர்வலர், பழங்குடியின மக்களுக்காக பல இயக்கங்களை நடத்தியிருக்கக்கூடிய ஸ்டேன் சாமி மரணமடைந்திருப்பதற்கு நீதி கேட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. பொய் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு அவர் மஹாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுவிக்க வேண்டும் என்று ஏற்கனவே பல கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சூழலில் தான் அவர் தற்போது மரணமடைந்துள்ளார். இதற்கு மத்திய பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார். அதேபோன்று சிறையில் இருக்கும் போதே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நோய் தொற்றும் ஏற்பட்டது. ஆனாலும் அந்த சிகிச்சைக்கான அனுமதியை அளிக்கவில்லை. நீதிமன்றம் சென்றே பெற்றுள்ளனர். மேலும் இதேபோன்று 20 பேர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக சமூக சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் இதுபோன்ற பொய்வழக்கில் கைது செய்யப்படுவது அதிகரித்திருப்பதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Stane Sami ,Kandy Chennai , sten swami
× RELATED ஸ்டேன் சாமி மரணம் தொடர்பாக குடியரசுத்...