திருவில்லிபுத்தூரில் மழையால் நிரம்பி வழியும் பெரியகுளம் கண்மாய்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாயில், பாசனம் செய்ய இரண்டு மாதத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பெரியகுளம் கண்மாயில் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

பெரியகுளம் கண்மாய் மூலம் சுமார் 500 ஏக்கர் பாசன விவசாயம் நடப்பது வழக்கம். கண்மாய் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ தற்போதைய நிலவரப்படி பெரியகுளம் கண்மாயில் 2 மாதத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்தால் கூடுதலாகவும் தண்ணீர் தேக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

Related Stories:

More
>