×

போடி எம்எல்ஏ அலுவலகம் 10 ஆண்டுகளாக முடக்கம்

*ஓபிஎஸ் பயன்படுத்துவாரா?

போடி : போடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் திமுக ஆட்சியின் போது 2006ம் ஆண்டு தென்றல்நகரில் கட்டப்பட்டது. போடி தொகுதி எம்எல்ஏவாக இருந்த லட்சுமணன் இந்த அலுவலகத்திலிருந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை தீர்த்தார். போடி தொகுதி மக்களும் தங்கள் கோரிக்கை மனுக்களை அலையாமல் இந்த அலுவலகத்தில் கொடுத்து வந்தனர். 2011ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது.

2011ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக போடி தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போதும் இத்தொகுதியில் மூன்றாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அவரது சட்டமன்ற அலுவலகம் பயன்பாடு இல்லாமல் எந்த பராமரிப்பும் இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தொகுதி மக்கள் எம்எல்ஏ அலுவலகம் எங்கிருக்கிறது என்று தெரியாமல் மனுக்களுடன் அலையும் நிலை உள்ளது.

போடி எம்எல்ஏவாக உள்ள ஓ.பன்னீர்செல்வம், ெதன்றல் நகரில் கட்டப்பட்ட அலுவலகத்திற்கு பதில் சுப்புராஜ் நகரில் உள்ள பங்களாவில் அலுவலகத்தை செயல்படுத்தி வருகிறார். இப்படி ஒரு அலுவலகம் இருப்பது போடி சட்டமன்ற தொகுதி மக்கள் தெரியாத நிலை உள்ளது. எனவே, இந்த அலுவலகத்தை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால், சட்டமன்ற அலுவலகத்தில் மண்டியுள்ள புதர்களை அகற்றி வேறுபயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bodie ,MLA , Bodi, OPS, AIADMK
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்