×

’மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை : இணை நோய் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை கே.கே.நகரில் விருகம்பாக்கம் தொகுதிகுட்பட்ட பாஜக, அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன்,

கொரோனா ஊரடங்கு காலத்தில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இனி நோய் உள்ளவர்கள் மாத்திரைகள் வாங்குவதற்கு சிரமப்படுவதாக தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் உடைய 20 லட்சம் பேர் கண்டறியப்பட்டு வீடு தேடி சென்று மாத்திரைகளை வழங்கப்படும் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு இம்மாதம் வர வேண்டிய 71 லட்சம் தடுப்பூசிகளில் 10 லட்சம் மட்டுமே வந்து இருப்பதாக கூறினார்.ஒன்றிய சுகாதார அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தனை சந்திக்க இருந்த நிலையில், அவர் ராஜினாமா செய்து இருப்பதால் புதிய அமைச்சரை சந்திக்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Minister ,Ma Subramaniam , முதல்வர்
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...