காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை : எல்லைப் பகுதிகளில் தொடரும் தேடுதல் வேட்டை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே நள்ளிரவு முதல் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள பூசல் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து கிராமத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் வீடு வீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதனையடுத்து ராணுவம் தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாலை வரை நீடித்த கடும் துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இருவரும் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.தீவிரவாதிகள் பதுங்கி இருந்த கட்டிடத்தில் இருந்து தானியங்கி துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், சிறியவகை ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துபற்றி காஷ்மீர் ஐ.ஜி.பி. விஜய் குமார் கூறும்போது, காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.  படையினருக்கு பாதிப்பு எதுவுமின்றி செயல்பட்டு என்கவுண்ட்டரில் ஈடுபட்ட போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார். 

Related Stories: