×

காவிரி குறுக்கே மேகதாது அணை திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும்: கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணா

ராம்நகர்: காவிரி குறுக்கே மேகதாது அணை திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயணா கூறியுள்ளார். பெங்களூரு அருகேயுள்ள ராம்நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒன்றிய அரசு அனைத்து அனுமதிகளையும் வழங்கியுள்ளதால் மேகதாது திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார். இந்த திட்டத்திற்கு அனைத்து அனுமதிகளையும் ஒன்றிய அரசு வழங்கியுள்ளதாகவும் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்ஜ் ஹோலி அணைத்திட்டத்திற்கு தேவையான அனுமதியை பெற்றதாக அஸ்வத் நாராயணா தெரிவித்தார். பசுமை தீர்ப்பாயத்தில் இருந்த தடை உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஒத்துழைப்பை பெற கர்நாடக அரசு முயற்சி செய்ததாகவும் குடிநீர் தேவைக்கான தண்ணீரை மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் தமிழ்நாடு அரசு திட்டத்தை நிராகரித்துவிட்டது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார். மேகதாதுவில் தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி கர்நாடகம் அணை கட்ட ம் முடியாது என அமைச்சர் கஜேந்திர சிங் உறுதி அளித்ததாகவும் துரைமுருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags : Maykrathu Dam ,Kaviri ,Karnataka ,Deputy Principal ,Aswat Narayana , megathathu dam
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...