ஒன்றிய குழு கூட்டம்

திருத்தணி: திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜீவா விஜயராகவன் தலைமை வகித்தார், ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திர பாபு, அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக துறைத்தலைவர் சுஜாதா மகாலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.  திருவாலங்காடு, நாபலூர், கூடல் வாடி, சக்கரமல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உயர்மின் விளக்கு கோபுரங்கள் அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் தற்போது தமிழ்நாடு அரசின் 16வது முதலமைச்சராக பதவியேற்று மக்கள் நலப்பணிகளில் உடனடியாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி வாழ்த்து கூறப்பட்டது. வரவு, செலவு கணக்குகள் தாக்கல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய மேலாளர் கிருஷ்ணன் தீர்மானத்தை வாசித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் ஒன்றிய அலுவலர் ஐயப்பன் நன்றி கூறினார்.

Related Stories:

>