அரசு பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பாசித் தெருவை சேர்ந்தவர் சதாம்உசேன் (30). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வருகிறாள். ஆன்லைன் வகுப்பில் பாடங்களை படிப்பதற்காக, சிறுமியின் பெற்றோர், அவளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி தந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன், சதாம்உசேன் அவசர தேவைக்கு, தகவல் சொல்ல வேண்டும் என கூறி, சிறுமியிடம் இருந்து, செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். அதன் பின்னர், வாட்ஸ் அப் மூலமாக, ஆபாச குறுஞ்செய்திகளை தினமும் அனுப்பி, சிறுமியிடம் ஆபாசமாக பேசி வந்தார். மேலும், சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால், பயந்துப்போன சிறுமி, இதுபற்றி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து,  செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், வழக்குப்பதிவு செய்து சதாம்உசேனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories:

More
>