மாமல்லபுரம் அருகே திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான இடம்: அமைச்சர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை அமைச்சர் எ.வ.வேலு திடீரென ஆய்வு செய்தார். மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் உள்ளது.  இந்த இடத்தை தமிழக பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று திடீரென ஆய்வு செய்தார். அந்த இடத்தில் திமுக தலைமை அலுவலகம் வர உள்ளதாக திமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பின்னர், ஆய்வு முடித்து கொண்டு புறப்பட்ட அமைச்சர் ஓ.எம்.ஆர் சாலையில் திருப்போரூர் - கேளம்பாக்கம் பைபாஸ் சாலைப்பணியை பார்வையிட்டார். அப்போது, சாலை பணி மேற்கொள்வதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, உடனடியாக சாலை பணியை முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories:

>