உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதியில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் பொது சந்தை கட்டுமான பணிகள்  நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா திடீர் ஆய்வு செய்தார். அப்போது,  பணிகள் குறித்து அதிகாரிகளிடம்  கேட்டறிந்தார். தொடர்ந்து சாலவாக்கம் பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்தை பார்வையிட்டார். பின்னர்,  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, வாடாதவூர் மயானப்பாதை, சிறுபினாயூர் கிராமத்தில் சிறுபாலப்பணிகள் என அரசு திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சாலவாக்கம் கிராம சேவை மைய வளாகத்தில் மரம் நட்டு வைத்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், வேல்முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் தமிழக அரசின் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா, அடிக்கடி ஆய்வு செய்கிறார். இதையொட்டி, கிதிரிப்பேட்டை ஊராட்சியில் நடைபெறும் மத்திய, மாநில அரசின் திட்டப்பணிகள் குறித்து நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது சமுதாயக்கூடம், இ சேவை மையம், வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கிராம மக்கள், ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தை மேம்படுத்தி தர வேண்டும், ஊராட்சியில் பாழடைந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதனை கேட்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: