×

ஆக்சிஜன் தயாரிப்பு நீட்டிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மனு

புதுடெல்லி: கொரோனா 2வது ஆலையின் ஆரம்பத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. அப்போது, தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தருவதாக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த இடைக்கால வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதிப்பதாகவும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் முழுவதையும் ஒன்றிய அரசிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த அனுமதி இம்மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் நேற்று புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க வழங்கப்பட்ட முந்தைய அனுமதியை மேலும் 6 மாதம் நீட்டித்து வழங்க வேண்டும்,’ என  கூறப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Supreme Court , Oxygen, Supreme Court, Sterlite
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...