×

மர்ம நபர்கள் சுட்டு கொன்றனர் ஹைதி அதிபர் படுகொலை: மனைவி கவலைக்கிடம்

போர்ட்டோ பிரின்ஸ்:  ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினெல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரீபியன் நாடான ஹைதியில் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருகின்றது. மேலும், இங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.  அதிபர் ஜோவினெல் மொய்சி தனியார் குடியிருப்பில் தங்கி இருந்தார். இந்நிலையில், அடையாளம் தெரியாத கும்பலால் நேற்று முன்தினம் இரவு அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அதிபரின் மனைவி மார்டின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்துக்கு இடைக்கால பிரதமர் ஜோசப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இடைக்கால பிரதமர் ஜோசப் கூறுகையில், ‘‘இது வெறுக்கத்தக்க, மனிதாபிமானமற்ற மற்றும் காட்டுமிராண்டி தனமான செயலாகும். போலீசார் மற்றும் இதர பாதுகாப்பு நிறுவனங்கள் ஹைதியின் பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன,’’ என்றார்.

Tags : Haiti , Mystery person, Haitian president, assassination
× RELATED ஆயுதக்குழுக்களின் ஆதிக்கத்தால்...