முல்லை பெரியாறு அணை பகுதியில் நில அதிர்வு

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. கேரள   மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை உள்ளது. இந்த அணையின்  நீர்பிடிப்பு  பகுதியான வள்ளக்கடவு பகுதியில் நேற்று முன்தினம் நில அதிர்வு   ஏற்பட்டுள்ளது. இரவு 8.50 மற்றும் 9.02 மணிக்கு இந்த நில அதிர்வு   ஏற்பட்டுள்ளது. 8.50 மணிக்கு ஏற்பட்ட அதிர்வு 5 விநாடிகள் நீடித்தது.  இது  ரிக்டர் அளவில் 2.3 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. 9.02க்கு ஏற்பட்ட நில அதிர்வு 2 விநாடிகள் மட்டுமே இருந்தது. இந்த நில அதிர்வால் பாதிப்புகள்  ஏதாவது ஏற்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories:

>