ஹிஸ்புல் தளபதி சுட்டுக்கொலை

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பை சேர்ந்த கமாண்டர் கொல்லப்பட்டார்.  ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா மாவட்டத்தில்  தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த வீரர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் உயிரிழந்தான். வீரர்களின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து மற்ற தீவிரவாதிகள் தப்பி சென்றனர்.

துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தீவிரவாதி ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த கமாண்டர்  மெக்ரூதின் ஹல்வாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பல்வேறு தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: