×

வைகோ மீதான வழக்கு ரத்து

சென்னை: மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி குறித்து  நக்கீரன் இதழில் வெளியான செய்தியில் கவர்னரையும் இணைத்து, அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், அவரது பணியில் தலையிடுவதாகவும், அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அவரது செயலாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் உள்ளிட்டோர் பேர் மீது சென்னை ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டு, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது, அவரை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்தனர். இதனால் தரையில் இது தொடர்பாக  சித்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்.பி., எம்.எம்.ஏக்கள் மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் இன்று பிறப்பித்த தீர்ப்பில், வைகோ உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Vaiko , The case against Vaiko was dismissed
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...