அமெரிக்காவில் சிகிச்சை முடிந்தது ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு திடீரென்று சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து 2016 மே மாதம் அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பிறகு வழக்கம்போல் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்து வருகிறார். ஆண்டுதோறும் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவரது வழக்கம். தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்ததால், ஒன்றிய அரசிடம் சிறப்பு அனுமதி வாங்கிய ரஜினிகாந்த், கடந்த ஜூன் 19ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு 2 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு நிறைவடைந்த நிலையில், நாளை அதிகாலை 2.20 மணியளவில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்புகிறார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் வரவேற்க உள்ளனர்.

Related Stories:

>