×

சூயஸ் கால்வாய் பிரச்னையால் சிறைபிடிப்பு ‘எவர் கிவன்’ சரக்கு கப்பல் 3 மாதத்துக்கு பின் விடுவிப்பு: எகிப்துக்கு பல கோடி அபராதம் செலுத்தியது

கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கிய ‘எவர் கிரீன்‘ சரக்கு கப்பல், எகிப்து அரசுக்கு அபராதம் செலுத்தி விட்டு 3 மாதங்களுக்குப் பயணத்தை தொடங்கி உள்ளது. எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய், சர்வதேச கடல் போக்குவரத்துக்கான முக்கிய மார்க்கமாக உள்ளது. இந்த கால்வாயை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்கள் பயன்படுத்தி வருகின்றன. இதை,. எகிப்து நாட்டுக்கு சொந்தமான, ‘சூயஸ் கால்வாய் ஆணையம்’ நிர்வாகம் செய்து வருகிறது. இந்த வழியை பயன்படுத்தும் கப்பல்கள், இந்த ஆணையத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.இந்நிலையில், ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எவர் கிவன்’ என்ற உலகின் பிரமாண்ட சரக்கு கப்பல், இந்த கால்வாயை கடக்கும் போது சூறாவளி காற்றால் திசை மாறி, கால்வாயின் குறுக்கே சிக்கியது.

இதனால், பல நாட்களுக்கு இந்த மார்க்கத்தில் கப்பல் போக்குவரத்து பாதித்தது. ஆறு நாட்களுக்குப் பிறகு பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இது மீட்கப்பட்டு, கப்பல் போக்குவரத்து துவங்கியது. இதைத் தொடர்ந்து, இந்த கப்பலால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும்படி சூயஸ் கால்வாய் ஆணையம் உத்தரவிட்டது. ரூ.4,225 கோடி நஷ்டஈடு கேட்டது. மேலும், கப்பலையும், அதன் ஊழியர்களை சிறை பிடித்து வைத்தது.இவ்வளவு பெரிய நஷ்டஈட்டை வழங்க முடியாது என  ஜப்பான் கப்பல் நிறுவனம் தெரிவித்தது. வழக்கும் தொடர்ந்தது.

பல மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தற்போது இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு தொகை நஷ்டஈடு தரப்பட்டது என்பதை இருதரப்பும் கூற மறுத்து விட்டன.    அபராதம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று ‘எவர் கிவன்’ கப்பல் தனது பயணத்தை தொடங்கியது. இந்த கப்பலில் 18 ஆயிரத்து 300 கன்டெய்னர்கள் உள்ளன.

விடுதலை ... விடுதலை... இந்திய ஊழியர்கள் குஷி
‘எவர் கிவன்’ சரக்கு கப்பலில் 30க்கும் மேற்பட்ட இந்திய ஊழியர்கள் உள்ளனர். அவர்களும் கப்பலுடன் சூயஸ் கால்வாய் ஆணையத்தால் சிறை பிடிக்கப்பட்டனர். பல மாதங்களுக்குப் பிறகு இவர்கள் நாடு திரும்பும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags : Suez ,Egypt , Suez Canal, ‘Ever Given’ cargo ship, Egypt, fine
× RELATED கந்தகக்கல்: நீதிபதிகளின் ஆகாய வர்ண ரத்தினம்