×

பிரதமர் மோடி அரசு 2.0-ன் முதலாவது அமைச்சரவை விரிவாக்கம்: தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்..!

டெல்லி: டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், இதுவரை மத்திய அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கிடையே பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, சிரோமணி அகாலிதளம் கட்சிகள் விலகியதால், அக்கட்சிகளின் 2  மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி தலைவர் மற்றும் ஒன்றிய அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான், ஒன்றிய அமைச்சராக இருந்த சுரேஷ் அங்காடியும் மரணம் அடைந்தனர்.

இதனால் ஒன்றிய அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களான பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட 9 பேருக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கிடையே சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சராக இருந்த தவர்சந்த் கெலாட், கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது இடமும் காலியாகி உள்ளது. இதுவரை, ஒன்றிய அமைச்சரவையில் பிரதமர் உட்பட 52 பேர் அமைச்சர்களாக உள்ளனர். தற்போது பாஜக கூட்டணி கட்சிகளில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மட்டும் இடம் பெற்றிருக்கிறது. பிற கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யவும், மாற்றியமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார்.

இதையொட்டி கடந்த சில வாரங்களாகவே பாஜக தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள புதிய அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதிதாக பதவியேற்க உள்ள 43 ஒன்றிய அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியாகியது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்பட புதிய அமைச்சரவை பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாக பதவியேற்ற அமைச்சர்களின் விவரம்:

* மராட்டிய முன்னாள் முதலமைச்சர் நாராயணன் ராணே ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.

* அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.

* மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சரான வீரேந்திரகுமார் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.

* காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.

* ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமசந்திர பிரசாத் சிங் ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.

* முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஸ்வினி வைஷ்ணவ் ஐஏஎஸ் ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.

* லோக்ஜனசக்தியைச் சேர்ந்த பசுபதி குமார் பராஸ் ஒன்றிய அமைச்சரக்க பதவியேற்றார்.

* ஒன்றிய இணையமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.

* முன்னாள் உள்துறை செயலாளர் ராஜ்குமார் சிங் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.

* முன்னாள் உள்துறை செய்யாலர் ராஜ்குமார் சிங் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.

* இணையமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் பூரி கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.

* கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக இருந்த மன்சுக் மாண்ட்வியா கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.

* ராஜஸ்தானைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பூபேந்தர் யாதவ் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.

* வேளாண்துறை அமைச்சரான புருஷோத்தம் ரூபாலா கேபினட் அமைச்சராக பதவியேற்றனர்.

* உள்துறை இணை அமைச்சராக உள்ள கிஷன் ரெட்டி ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.

* ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூர் கேபினட் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்!

* உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் சவுதரி ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.

* பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் கட்சியைச் சேர்ந்த அனுப்பிரியா பட்டேல் கேபினட் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்!

* உ.பி. மாநில முன்னாள் அமைச்சரான சத்தியபால் சிங் பகேல் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.

* தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார்.

மன்சுக் மன்தாவியா, பூபேந்தர் யாதவந், பங்ஜக் சவுத்ரி, ராஜீவ் சந்திரசேகர், சோபா கராண்டஜே, பானு பிரதாப் வர்மா, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், மீனாட்சி லேகி, அனுபமா தேவி, நாராயணசாமி, கவுஷல் கிஷோர், அஜய் பட், பி எல் வர்மா, அஜய் குமார், சவுகான் தேவ்சிங், பகவந்த் கூபா, கபில் மோரேஷ்வர் பாட்டீல், சுஷ்ரி பிரதிமா பவுமிக், சுபாஷ் சர்கார், பகவத் கிஷன் ராவ் காரத், ராஜ்குமார் ரஞ்சன் சிங், பாரதி பிரவீன் பவார், பிஷ்வேஸ்வரர் துடு, சாந்தனு தாகூர், முஞ்சபரா மகேந்திர பாய், ஜான் பார்லா, நிஸித் பிரமானிக் உள்ளிட்டோரும் ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.


Tags : Modi ,Tamil Nadu ,BJaka Chairman ,Murugan , First Cabinet Expansion of Prime Minister Modi Government 2.0: 43 ministers including Tamil Nadu BJP leader L Murugan have been appointed ..!
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...