‘வித்யாபாலன் துப்பாக்கி சூடு’ பாலிவுட் நடிகையை கவுரவித்த ராணுவம்

மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலனின் பெயரில் துப்பாக்கி சூடு ஒன்றிற்கு இந்திய ராணுவம் பெயரிட்டு இருப்பதை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய ராணுவத்தின் சார்பில் குளிர்கால விழா நடந்தது. இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலனும், அவரது கணவர் சித்தார்த் ராயும் கலந்து கொண்டனர். இவர்கள் பங்கேற்றது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இந்திய சினிமா துறையில் நடிகை வித்யாபாலனின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்திய ராணுவம் தங்களது துப்பாக்கி சூடுதல் வீச்சிற்கு, ‘வித்யாபாலன் துப்பாக்கி சூடு’ என்று பெயரிட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து வித்யாபாலன் தரப்பில் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ஷெர்னி (பெண் புலி) படத்தில் வன அதிகாரியாக வித்யாபாலன் நடித்ததை பலரும் பாராட்டிய நிலையில், தற்போது ராணுவம் அவரது பெயரில் ‘வித்யாபாலன் துப்பாக்கி சூடு’ என்று பெயரிட்டு கவுரவித்திருப்பதை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories:

More