×

கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் பேருந்து போக்குவரத்து தொடங்கியது!: பொதுமக்கள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பாலத்தில் 3 ஆண்டுகளுக்கு பின் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வலுவிழந்ததை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கடலூர், விழுப்புரம், சென்னை செல்லும் பேருந்துகள் மாற்று வழியாக மதனத்தூர் கொள்ளிடம் ஆற்று பாலம் வழியே இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்ட நிலையில் அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

அரசு தலைமை கொறடா கோவி. செழியன் கொடியசைத்து பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார். 3 ஆண்டுகளுக்கு பின் அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் இருந்து பேருந்து போக்குவரத்து தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் முதற்கட்டமாக நகர பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Kumbagonam , Kumbakonam, Embankment Kollidam Bridge, Bus Transport
× RELATED கும்பகோணத்தில் அதிக போதைக்காக கிருமி...