புதிய அமைச்சரவையில் 4 பெண்கள்... உ.பி.யை சேர்ந்த 7 பேர்; குஜராத்தில் இருந்து 5 பேர் தேர்வு : 43 ஒன்றிய அமைச்சர்களின் பெயர் பட்டியல்!!

டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள புதிய அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.புதிதாக பதவியேற்க உள்ள 43 ஒன்றிய அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த மாநில பாஜக தலைவர் எல் முருகன் ஒன்றிய அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு இணையமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. 43 அமைச்சர்களில் 4 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு சென்ற ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால் இடம்பெற்றுள்ளார். சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து 7 பேரும் குஜராத்திலிருந்து 5 பேரும் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சரவையில் மொத்தம் 15 கேபினட் அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றனர். மற்ற 7 பேர் புதியவர்களாவர்.

43 அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு:

*நாராயணன் ரானே

*சர்பானந்த சோனோவால்

*வீரேந்திர குமார்

*ஜோதிராதித்ய சிந்தியா

*ராம்சந்திர பிரசாத் சிங்

*அஸ்வின் வைஷ்ணவ்

*பாஸுபதி குமார் பராஸ்

*கிரண் ரிஜிஜு

*ராஜ்குமார் சிங்

*ஹர்தீப் சிங் புரி

*மன்சுக் மன்தாவியா

*பூபேந்தர் யாதவந்

*புருஷோத்தம் ரூபாலா

*கிஷன் ரெட்டி

*அனுராக் சிங் தாக்கூர்

*பங்ஜக் சவுத்ரி

*அனுப்ரியா சிங் படேல்

*சத்ய பால் சிங் பாகல்

*ராஜீவ் சந்திரசேகர்

*சோபா கராண்டஜே

*பானு பிரதாப் வர்மா

 *தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்

*மீனாட்சி லேகி

*அனுபமா தேவி

*நாராயணசாமி

*கவுஷல் கிஷோர்

*அஜய் பட்

*பி எல் வர்மா

*அஜய் குமார்

*சவுகான் தேவ்சிங்

*பகவந்த் கூபா

*கபில் மோரேஷ்வர் பாட்டீல்

*சுஷ்ரி பிரதிமா பவுமிக்

*சுபாஷ் சர்கார்

*பகவத் கிஷன் ராவ் காரத்

*ராஜ்குமார் ரஞ்சன் சிங்

*பாரதி பிரவீன் பவார்

*பிஷ்வேஸ்வரர் துடு

*சாந்தனு தாகூர்

*முஞ்சபரா மகேந்திர பாய்

*ஜான் பார்லா

*எல் முருகன்

*நிஸித் பிரமானிக்

Related Stories:

>