×

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப் பணிகளை திமுக அரசு துரிதப்படுத்த கோரிக்கை

ஆவடி: சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக நெடுஞ்சாலை செல்கிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் இருந்து திருத்தணி,  திருப்பதிக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இதனால் சி.டி.எச் சாலை பரபரப்பாக காணப்படும். ஆவடியில் இருந்து மிலிட்டரி சைடிங் பகுதிக்கு செல்லும் பட்டாபிராம் சி.டி.எச் சாலையில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.  ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங், முத்தாபுதுப்பேட்டை பகுதிகளுக்கு அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் செல்வதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடியே கிடக்கும்.

இதனால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்போது நெரிசல் ஏற்பட்டுவந்தது. இதனால் கடந்த 2006-11ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவின்படி, 33.48 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக, ரயில்வே மேம்பாலம் அமைக்க, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகை போதாது என அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால் மேம்பாலம் அமைக்க ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், ‘சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்தது.

இதனால் இந்த திட்டத்தை ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைதுறை மறு ஆய்வு செய்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மேம்பால திட்ட மதிப்பீடு, ரூ.52.11 கோடியாக உயர்த்தப்பட்டது. திருத்திய மதிப்பீட்டில் 6 வழிச்சாலை மேம்பாலமாக அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் பணிகள் நடந்து வந்தன. இரு முனைகளிலும், துவக்கத்தில் இணைந்தும், நடுப்பகுதியில் சற்று பிரிந்து இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலப் பணிகளை திட்டமிட்டபடி 2020 பிப்ரவரி மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த பாலப்பணிகள் ‘கான்கிரீட் டெக்’இதில் தூண்கள் அமைக்கப்பட்டு, ‘கான்கிரீட் டெக்’ பதிக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை  துவங்கியது.

மொத்தம், 16 கான்கிரீட் டெக்குகள் அமைக்கப்பட வேண்டும். தற்போது அரைகுறையாக முடிக்கப்பட்டுள்ளது. எனவே, மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுத்து பட்டாபிராம் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறுகின்றனர்.

Tags : DMK government ,AIADMK government , The DMK government has demanded to expedite the work on the Bhattapram flyover which was put on hold by the AIADMK government
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...