×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்திற்கு மேலும் 6 மாதம் அனுமதி வழங்குக : வேதாந்தா உச்ச நீதிமன்றத்தில் மனு

டெல்லி :தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்திற்கு மேலும் 6 மாதம் அனுமதியை நீட்டிக்கக் கோரி ஸ்டெர்லைட் மனு அளித்துள்ளது.கொரோனா பாதிப்பின் 2வது அலையின் ஆரம்பத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கினால் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக வழங்குவோம் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆக்சிஜன் தட்டுப்பாடு பலர் உயிரிழப்பதை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த மாதம் 31ம் தேதி வரை தான் பொருந்தும் என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க அரசு அனுமதி வழங்கியது.

அதன் படி, கடந்த மே மாதம் 12ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் ஆறு மாதம் மேற்கொள்ள அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மனு அளித்துள்ளது. இதையடுத்து இந்த கோரிக்கை மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  



Tags : Thoothukudi ,Vedanta Supreme Court , தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...