×

ஆல்பா, பீட்டா, காமா, டெல்டாவைத் தொடர்ந்து புது தலைவலி.. வீரியமிக்க லாம்ப்டா வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு; இந்தியாவில் இல்லையாம்!!

டெல்லி : பெரு நாட்டில் கண்டறியப்பட்டுள்ள லாம்ப்டா வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வெவ்வேறு வகையில் உருமாற்றம் அடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தியாவில் மோசமான பாதிப்பை உண்டாக்கிய டெல்டாவின் மாற்றமடைந்த வேரியண்டான டெல்டா ப்ளஸ் உலக நாடுகளால் ஆபத்திற்குரியதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் வைரஸை விட மிக தீவிரமான லாம்ப்டா என்ற உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் லாம்ப்டா என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உருமாறிய கொரோனா லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனைக் கவனிக்கப்பட வேண்டிய கொரோனா என்றும் உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் லாம்ப்டா வைரஸ் வீரியமிக்கது, வேகமாக பரவக்கூடியது என்பதால் மூன்றாவது அலை பரவலுக்கு லாம்ப்டா காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.



Tags : India , லாம்ப்டா
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...