×

தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் :சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓபிஎஸ்!!

சென்னை : அதிமுக மற்றும் பாஜகவினர் மத்தியில் தேர்தல் தோல்வி தொடர்பான பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் “அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும்”. இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள்சண்முகம், கூட்டணி சரியில்லாததால் அதிமுக ஆட்சியை இழந்து விட்டது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தோல்வியை சந்தித்தோம்,என்று பேசினார். சண்முகத்தின் இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது.இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜக மீது வைத்த குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி “உங்களால் தான்” என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு…என பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். சி.வி.சண்முகத்தின் இந்த பேச்சு அதிமுக – பாஜக இடையே பெரும் மோதலை உண்டாகியது. இதனிடையே அதிமுக - பாஜக கூட்டணி குறித்து விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக உடனான கூட்டணி தொடர்வதை சி.வி.சண்முகமோ நானோ முடிவு செய்ய முடியாது. இந்த விவகாரம் குறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும்.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சி பற்றி தெரியும். பாஜக உடனான அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் தொடருமா என்பது பற்றி கட்சி மேலிடம் அறிவிக்கும். என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் அளித்துள்ள விளக்கம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


Tags : AIADMK ,BJP ,Tamil ,Nadu ,OBS , அதிமுக,பாஜக
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...