பாஜக உடனான கூட்டணி தொடர்வதை சி.வி.சண்முகமோ நானோ முடிவு செய்ய முடியாது : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!!

சென்னை : பாஜகவால் தான் அதிமுக தோற்றுவிட்டது என சி.வி.சண்முகம் கூறியது அதிகாரப்பூர்வ கருத்தல்ல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள்சண்முகம், கூட்டணி சரியில்லாததால் அதிமுக ஆட்சியை இழந்து விட்டது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தோல்வியை சந்தித்தோம்,என்று பேசினார். சண்முகத்தின் இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது.இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜக மீது வைத்த குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி “உங்களால் தான்” என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு…என பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதே போல் பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், BJPயுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் - Ex ADMK மந்திரி @CVShanmugamoflஇவர் கருத்தை @OfficeOfOPS

@EPSTamilNadu ஏற்கிறார்களா? பதில் சொல்லவேண்டும். இல்லையெனில் action எடுக்க வேண்டும்.87403 ஓட்டுப் போட்ட மெஜாரிட்டி மக்களை அவமானப்படுத்திய சிவி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சி.வி.சண்முகத்தின் பேச்சு குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், சி.வி சண்முகம் கூறியது அதிகாரப்பூர்வ கருத்தல்ல. அதிமுக உட்கட்சி கூட்டத்திலேயே அவர் அவ்வாறு பேசினார். உட்கட்சி கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியது குறித்து கே.டி.ராகவன் எதிர்வினை ஆற்றுவது சரியல்ல. இந்த விவகாரம் பெரிதாக்க வேண்டிய விஷயம் அல்ல. பாஜக உடனான கூட்டணி தொடர்வதை சி.வி.சண்முகமோ நானோ முடிவு செய்ய முடியாது. இந்த விவகாரம் குறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும்.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சி பற்றி தெரியும். பாஜக உடனான அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் தொடருமா என்பது பற்றி கட்சி மேலிடம் அறிவிக்கும். என்றும் தெரிவித்தார்.

Related Stories:

>