×

நிதித்துறையின் கீழ் பொதுத்துறை நிறுவனங்கள்: ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை நிதித்துறை கட்டுப்பாட்டில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. கனரக தொழில்கள் துறையின் கீழ் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் இனி நிதித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும். அரசுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்று நிதி திரட்ட ஏதுவாக அவை நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் நடப்பாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஐ.டி.பி.ஐ உள்பட இரு பொதுத்துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக்கழக பங்குகளை விற்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. சிறப்பாகச் செயல்படும் பொதுத் துறை நிறுவனங்களை நவரத்தின நிறுவனங்கள் என்பர். நவரத்தின நிறுவனங்களை மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது. 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.

Tags : United ,States , union government
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்