×

ஆவின் பால் 3 விலை குறைத்த பின்பும் அதிக விலைக்கு விற்பனை செய்த 11 விற்பனையாளர்கள் உரிமம் ரத்து: அமைச்சர் சா.மு.நாசர் அதிரடி

சென்னை: ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்தார். அதில், இரண்டாவதாக மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. முதல்வரின் ஆணைக்கிணங்க, இத்திட்டத்தை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில்  கடந்த 16ம் தேதி துவக்கி வைத்தார். இதன்படி, அனைத்து  ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து, ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  உத்தரவின் அடிப்படையில், ஆவின் மேலாண்மை இயக்குநரால் உடனடியாக சிறப்பு குழுவை அமைத்து சென்னையில் உள்ள அனைத்து சில்லரை விற்பனை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி, சிறப்பு குழு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட போது 11 சில்லரை விற்பனை கடைகளில் ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பதாக தெரியவந்தது. அவர்களுடைய சில்லரை விற்பனை உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. மேலும் இந்த சிறப்பு குழு தினந்தோறும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும்,  இதுபோன்ற தவறுகளை (நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது) சில்லரை விற்பனை உரிமையாளர்கள் செய்யும் பட்சத்தில் அவர்கள் உரிமம் ரத்து செய்து மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் இந்த நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் தொடரும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது. …

The post ஆவின் பால் 3 விலை குறைத்த பின்பும் அதிக விலைக்கு விற்பனை செய்த 11 விற்பனையாளர்கள் உரிமம் ரத்து: அமைச்சர் சா.மு.நாசர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Aavin Milk ,Minister S.M. Nasser ,Chennai ,Avin administration ,Chief Minister ,M.K.Stalin ,Avin ,3 ,Minister ,S.M. Nasser ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...