பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் கோபால் கைதானதை கண்டித்து போராட்டம் நடத்திய வைகோ மீதான வழக்கு ரத்து

சென்னை : நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதானதை கண்டித்து போராட்டம் நடத்திய வைகோ மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து வெளியான நக்கீரன் கட்டுரைகளில் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆளுநர் மாளிகை அதிகாரி அளித்த புகாரில் நக்கீரன் ஆசிரியர் கோபால், கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் நக்கீரன் ஆசிரியர் வைகோவை சிறையிலடைக்க மறுப்புத் தெரிவித்து விடுதலை செய்தது.

நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு ஆதரவாக ஊடகத்துறையினர் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது நக்கீரன் கோபாலை சந்திக்க வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் முன்பு போராட்டம் தர்ணாவில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து வைகோ கைது செய்யப்பட்டார்.இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் உள்ள எம் எம்எல்க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வைகோ மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>