சிறை காவலில் உயிரிழந்த சமூக போராளி ஸ்டேன் ஸ்வாமி வழக்கில் சட்ட விதி மீறல்கள் ஏதும் இல்லை : ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி : சிறை காவலில் உயிரிழந்த சமூக போராளி ஸ்டேன் ஸ்வாமியின் மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்கர் - பரிஷத் வழக்கில் சுதந்திரமிக்க சட்டத்துறை மூலமே மட்டுமே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சட்டப்படியான நடவடிக்கைகளை தொடர்ந்தே ஸ்டேன் சுவாமி தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்டேன் சுவாமி மீதான குற்றச்சாட்டுகளின் தன்மை காரணமாக தான் அவரது ஜாமீன் விண்ணப்பங்கள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதாக அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் சட்ட மீறல்களுக்கு எதிராக தான் செயல்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், உரிமைகளை சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதற்கு எதிராக அல்ல என்று கூறி இருக்கிறது. ஸ்டேன் கைது விவகாரத்தில் சட்ட விதி மீறல்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடல் நிலை பாதிக்கப்பட்ட ஸ்டேன் ஸ்வாமிக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories:

More