சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்தது!: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குமுறல்..!!

விழுப்புரம்: சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோல்வியடைந்ததாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூரில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கணக்கு சரியாக அமையவில்லை என்றார்.  பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டை முழுமையாக இழந்துவிட்டதாகவும், அதுவே தோல்விக்கு பிரதான காரணம் என்றும் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

உதாரணமாக விழுப்புரம் தொகுதியில் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. அங்குள்ள சிறுபான்மையினர் ஓட்டு மட்டும் கிட்டத்தட்ட 20,000 ஓட்டு ஆகும். பாஜக-வுடன் கூட்டணி வைத்ததால் முழுவதுமான வாக்குகளை நாம் இழந்துவிட்டோம் என்று குறிப்பிட்டார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது மன குமுறலை பதிவு செய்துள்ளார். இதனால் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தொடருமா? என்று கட்சியினர் இடையே குழப்பம் நிலவி வருகிறது.

Related Stories: