தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் பதவியேற்பு

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் பதவியேற்றார். சிறுபான்மையினர் மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காக 1989ஆம் ஆண்டில் சிறுபான்மையினர் நல ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தற்போதைய புதிய தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்று இருக்கிறார்.

குறிப்பாக சிறுபான்மையினர் நல ஆணையத்தை பொறுத்தவரையில் 1989ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது உருவாக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக 2010ல் இதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையும் இதற்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டு சிறுபான்மையினர் மக்களுக்கான கல்வி, சமூகம், பொருளாதார நலன் சார்ந்த மேம்பாட்டிற்காக அவர்கள் தொடர்ந்து செயல்பட கூடிய அமைப்பாக இருந்து வருகிறது.

இதன் அடிப்படையில் புதிய ஆட்சி அமைந்ததற்கு பிறகு கடந்த 28ஆம் தேதி ஆணையத்தின் புதிய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். எனவே தற்போது இந்த ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் பொறுப்பேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு இந்த ஆணையம் சார்ந்த பல்வேறு கோப்புகளை அவர் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் ஆணைய உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

Related Stories:

More
>