×

ரஷ்யாவில் மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்!: விமானத்தில் பயணித்த 28 பேரும் உயிரிழப்பு?..உடல்களை தேடும் பணி தீவிரம்..!!

கம்சாட்கா: ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 28 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ரஷ்யா வானிலை காரணமாக மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து கம்சாட்கா ஆளுநர் விளாதிமிர் சொலோடோவ் தெரிவித்திருப்பதாவது, கடற்படை மற்றும் ராணுவ விமானங்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. அதன் பயனாக விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பலானா நகரத்தில் இருந்து வடக்கில் 5 மீட்டர் தூரத்தில் விமான பாகங்கள் கிடக்கின்றன. சில பாகங்கள் அங்குள்ள கடற்கரைகளிலும் காணப்படுகின்றன என்று தெரிவித்தார். விமானத்தில் பயணம் செய்த 28 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. உடல்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் பலானா நகரின் மேயர் ஓல்கா முகிரோ பயணம் செய்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பெட்ரோபாவ்லாக்ஸ் - கம்சாட்ஸ்கியில் இருந்து பலானா நகருக்கு, ‘ஆன்டோனாவ் ஆன் 26’ என்ற விமானம் நேற்று புறப்பட்டு  சென்றது.

இதில், 22 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தனர். இந்த விமானம் பாலானா விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக வந்து கொண்டிருந்தது. அப்போது, விமான நிலையத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும்போது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து அது துண்டிக்கப்பட்டது. மேலும், ரேடாரில் இருந்தும் விமானம் மாயமாகி சென்றது. இந்நிலையில், மலை முகட்டில் மோதி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் விமானத்தில் பயணித்த 28 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Tags : Russia , Russia, passenger plane, 28 dead
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...