×

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்

மும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார்(98) உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் திலீப்குமார் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நடிகர் திலீப்குமார் உயிர் இன்று பிரிந்தது. 98 வயதான நடிகர் திலீப்குமார் 1944ம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் அறிமுகமானார். தாதா சாகேப் பால்கே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார்.

Tags : Dilipkumar , dilipkumar
× RELATED ‘ஜெயிலர்’ வெற்றிவிழா 300 கலைஞர்களுக்கு...