பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார்(98) உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்

மும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார்(98) உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் திலீப்குமார் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நடிகர் திலீப்குமார் உயிர் இன்று பிரிந்தது. 98 வயதான நடிகர் திலீப்குமார் 1944ம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் அறிமுகமானார். தாதா சாகேப் பால்கே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

Related Stories:

>