×

3 வீரர்களுக்கு கொரோனா எதிரொலி: ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய இங்கிலாந்து அணி

லண்டன்: இங்கிலாந்து வீரர்கள் 3 பேர் மற்றும் 4 அணி நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.  அங்கு தனிமைப்படுத்துதலை முடித்த பாகிஸ்தான் அணி இப்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முதல் ஒருநாள் போட்டி கார்டிப் நகரில் நாளை பகல்/இரவு ஆட்டமாக நடைபெற உள்ள நிலையில், போட்டிக்கு முன்னதாக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இங்கிலாந்து வீரர்கள் 3 பேர் மற்றும் 4 நிர்வாகிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்படாவிட்டாலும்,  பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு புதிய அணி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.அதற்கு ஏற்ப  9 அறிமுக வீரர்களுடன் ஒருநாள் தொடருக்கான புதிய அணியை இங்கிலாந்து  வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. மோர்கனுக்கு பதில்   பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் வீரர்கள்  கிராவ்லி, டேனியல் லாரன்ஸ் ஆகியோருக்கு முதல்முறையாக ஒருநாள் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பர் ஜான் சிம்சன் உட்பட 7 பேர் சர்வதேச போட்டிகளுக்கு புதியவர்கள். கிரிக்கெட் வரலாற்றில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணிக்கு பதிலாக முற்றிலும் புதிய அணி அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

முகக்கவசம் வேண்டாம்!
  இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை காண ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் இங்கிலாந்து அரசு அறிவித்துவிட்டது. மேலும், அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட்  ஆட்டங்களைக் காண 100 சதவீத ரசிகர்களை அனுமதிப்போம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில்தான் கொரோனா  தன் வேலையை காட்டியுள்ளது.

Tags : Corona ,New England ,Stokes , Players, Corona, Stokes, England team
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து