×

விம்பிள்டன் அரையிறுதிக்கு சபலென்கா, கெர்பர் தகுதி

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, ஜெர்மனி வீராங்கனை கெர்பர் தகுதி பெற்றனர். காலிறுதியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜாபியருடன் நேற்று மோதிய சபலென்கா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு சபலென்கா தகுதி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். மற்றொரு கால் இறுதியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் விக்டோரியா கொலுபிக்கை (சுவிஸ்) வீழ்த்தினார்.

செக் குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் மோதிய ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-3 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் நம்பர் 2 வீரர் டானில் மெட்வதேவ் (ரஷ்யா) 6-2, 6-7 (2-7), 6-3, 3-6, 3-6 என 5 செட்களில் ஹூபர்ட் ஹர்காக்ஸிடம் (போலந்து) அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

* ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
* டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், ‘நமது வீரர், வீராங்கனைகள் மிகவும் கடுமையாக பயிற்சி செய்து தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு நமது ஆதரவும், வாழ்த்தும் மிக மிக அவசியம்’ என்று கூறியுள்ளார்.
* ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தின்போது ரசிகர்கள் கூட்டமாகத் திரண்டு நிற்பதை தவிர்க்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இது உதவும் என்று டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
* இந்திய மகளிர் அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து: ஹீதர் நைட் (கேப்டன்), டாமி பியூமான்ட், கேதரின் பிரன்ட், பிரெயா டேவீஸ், சோபியா டங்க்லி, சோபி எக்லெஸ்டோன், டாஷ் பாரன்ட், சாரா கிளென், ஏமி ஜோன்ஸ், நதாலி ஸ்கிவர், அன்யா ஷ்ரப்சோல், மேடி வில்லியர்ஸ், பிரான் வில்சன், டானி வியாட்.

Tags : Sabalenka ,Gerber ,Wimbledon , Wimbledon, semifinals, Sabalenka, Gerber Taku
× RELATED சில்லி பாயின்ட்…