×

பான் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்... வந்தாச்சு இ-பான்: வெறும் ரூ.8 செலவில் ஆன்லைனில் பெறலாம்

புதுடெல்லி: இனி ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் இ-பான் பெறும் வசதி வந்து விட்டது. வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து ஐடி ரிட்டன் தாக்கல் செய்வது வரை பல்வேறு விஷயங்களுக்கு அடையாள சான்றாக நிரந்தர கணக்கு எண்ணான பான் எண் அவசியமாகி உள்ளது. புதிதாக பான் எண் விண்ணப்பிப்பவர்களுக்கு பான் கார்டு வழங்கப்படுகிறது. அடிக்கடி தேவைப்படுவதால் பான் கார்டை பலரும் எப்போதும் கைவசம் வைத்திருப்பது வழக்கம். இந்த பான் கார்டு தொலைந்து போகும் பட்சத்தில், மீண்டும் இதை மறுமுறை விண்ணப்பித்து டூப்ளிகேட் அட்டை பெறுவதற்கு அதிக நாட்களாகும். அதற்கு பணமும் செலவாகும். ஆனால், தற்போது பான் கார்டு தொலைந்து போனாலோ, சேதமடைந்தாலோ நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

பைசா செலவின்றி ஆன்லைனில் அதை பெறலாம். அதோடு இதை எப்போதும் பர்சிலேயே சுமந்து செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. இதற்காக இ-பான் எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. என்எஸ்டிஎல் இணையதளம் மூலமாக இந்த வசதியை அணுக முடியும். https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html  என்ற இந்த லிங்கில் சென்றால் அதில் பான் எண், ஆதார் எண், பிறந்த தேதி போன்ற தகவல்கள் கேட்கப்படும். அத்தகவல்களை கொடுத்து சப்மிட் செய்தால், முதல் முதலில்  நீங்கள் எந்த இணையதளம் மூலமாக பான் எண் விண்ணப்பித்தீர்களோ அந்த இணையதளத்தின் லிங்கை வழங்கும். உதாரணமாக யுடிஐ இணையதளம் வாயிலாக பான் எண் வழங்கப்பட்டிருந்தால்   https://www.myutiitsl.com/PAN_ONLINE/ePANCard என்ற லிங்க் காட்டப்படும். இந்த லிங்கில் உங்கள் பான் எண், பிறந்த மாதம், ஆண்டு ஆகிய தகவல்களை கொடுத்து அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.

அடுத்ததாக உங்களின் ஆதார் எண், மொபைல் நம்பர், இமெயில் முகவரி போன்ற தகவல்கள் கேட்கப்படும். அதைத் தொடர்ந்து இ-பான் வழங்குவதற்காக ஆன்லைன் கட்டணமாக ரூ.8.26 செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்த உடன், இ-பானுக்காக லிங்க் மற்றும் பிடிஎப் பைலாக இ-பான் உங்கள் இமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். இதை வங்கிகள் உள்ளிட்ட விஷயங்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இதனை கலர் பிரிண்ட் அவுட் எடுத்து லேமினேஷன் செய்தும் பயன்படுத்தலாம்.


5க்கும் மேற்பட்ட ஓடிபி பாதுகாப்பு கருதி இந்த நடைமுறையில் 5க்கும் மேற்பட்ட ஒடிபி எண்கள் வழங்கப்படுகின்றன. சரியான எண்களை, குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவிட்டால் மட்டுமே அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று வெற்றிகரமாக இ-பான் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி பான் கார்டு பயன்படுத்துவோருக்கு நிச்சயம் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

Tags : Ban Card, e-Ban, Online
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை