மேற்கு வங்கத்தில் சட்ட மேலவை: தீர்மானம் நிறைவேறியது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 3வது முறையாக வெற்றி பெற்று, மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, பாஜ.வின் சுவேந்து  அதிகாரியிடம் தோற்றார். தற்போது அவர் எம்எல்ஏ.வாக இல்லாமல், முதல்வர் பதவியை வகித்து வருகிறார். அரசியலமைப்பு சட்டப்படி, முதல்வராக பதவியேற்றதில் இருந்து 6 மாதங்களில் இவர் எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சுவேந்துவின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இம்மாநிலத்தில் சட்டமேலவையை அமைக்கலாம் என  இடைக்கால குழு அறிக்கை சமர்ப்பித்து இருந்தது. இதை ஏற்றுக் கொண்ட அரசு, சட்டமேலவையை அமைப்பதற்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் நேற்று கொண்டு வந்து நிறைவேற்றியது.  ‘சட்டப்பேரவை தேர்தலில் தோற்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை, பின்வாசல் வழியாக சட்டப்பேரவைக்கு கொண்டு வருவதறகாகவே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது,’ என பாஜ குற்றம்சாட்டியது.

Related Stories:

>