×

காங். எம்பி.க்களை தொடர்ந்து கம்யூனிஸ்ட் எம்பி.க்களுக்கும் லட்சத்தீவு அனுமதி மறுப்பு

லட்சத்தீவு: கேரளாவின் இடது ஜனநாயக முன்னணியை சேர்ந்த 8 எம்பி.க்கள் வருவதற்கு லட்சத்தீவு நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. யூனியன் பிரதேசமான லட்சத்தீவு வருவதற்கு அனுமதிக்க கோரி காங்கிரஸ் எம்பி.க்கள் ஹிபி ஏதென், பிரதாபன் ஆகியோர் விண்ணப்பித்தனர். ஆனால், இவர்களின் வருகை மற்றும் அரசியல் நடவடிக்கைகள் அமைதியான சூழலை கெடுத்துவிடும் என கூறிய லட்சத்தீவு நிர்வாகம், கடந்த சனியன்று அவர்களுக்கு அனுமதி மறுத்து விட்டது. இந்நிலையில், கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலையைிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணியை சேர்ந்த  எம்பி.க்கள் இளமாறன் கரீம், சிவதாசன், ஆரீப், பினாய் விஸ்வம், ஸ்ரேயம்ஸ் குமார், சோமபிரசாத், தாமஸ் சழிகாடன் மற்றும் ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் லட்சத்தீவு செல்வதற்கு அனுமதி கேட்டனர். இவர்களும் லட்சத்தீவுக்குள் வருவதற்கு நிர்வாகம் அனுமதி தர மறுத்து விட்டது.  இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் இடது ஜனநாயக முன்னிணி எம்பி.க்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


Tags : Cong. ,Lakshadweep , Cong. MP, Communist MP, Lakshadweep
× RELATED எதிர்கட்சிகள் குறித்து விமர்சித்த...