×

முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு மூடும் முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:  முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவை மூடும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கைமுந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு இந்த விஷயத்தில் பெரும் துணையாக திகழ்ந்து வருவது கேரள மாநிலம் கொல்லத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு. இந்தியாவிலிருந்து முந்திரி மற்றும் அதன் துணை பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்த அமைப்பில் உறுப்பினராக வேண்டியது அவசியமாகும். உறுப்பினராக பதிவு செய்வதுடன், புதுப்பித்து அதற்கான சான்றிதழ்களை வைத்திருந்தால் தான் மத்திய அரசு வழங்கும் ஏற்றுமதிக்கான பல்வேறு சலுகைகளை ஏற்றுமதியாளர்கள் பெற முடியும்.

 ஆனால், முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவில் உறுப்பினராக பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் அவற்றுக்கான சான்றிதழ் வழங்கும் அதிகாரம் முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவிடமிருந்து பறிக்கப்பட்டு வேளாண்மை மற்றும் பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அடுத்தக்கட்டமாக முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு மூடப்படவுள்ளது. இது முந்திரி ஏற்றுமதி வளர்ச்சியை சிதைத்து விடும். இந்த முடிவு திரும்பப் பெறப்பட வேண்டும்.   

எனவே, முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு அதற்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களுடன் தனி அமைப்பாக நீடிப்பது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுவிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரத்தை மீண்டும் அந்த அமைப்பிடமே ஒன்றிய அரசு வழங்க வேண்டும். இதை நிறைவேற்றும்படி ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.

Tags : Cashew Export Promotion Committee ,Ramadas , Cashew Exports, Ramadas
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்