×

தனியார் மருத்துவமனையில் போடும் நிலையில் விரைவில் இலவச ‘ஸ்புட்னிக்-5’ தடுப்பூசி: கோவிட் -19 குழு தலைவர் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்புக்காக உள்நாட்டு தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக அரசு மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்ய நாட்டின் தயாரிப்பான ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் அளித்தது. அதனால், தனியார் மருத்துவமனைகளில் மட்டும், இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது, ஸ்புட்னிக்-5 தடுப்பூசியானது, அரசின் தடுப்பூசி முகாம்களில் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தடுப்பூசி மையத்தின் கோவிட் -19 குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறுகையில், ‘ஸ்புட்னிக் - 5 தடுப்பூசியானது,  விரைவில் அரசின் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும். தற்போது தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கப்பட்ட இந்த தடுப்பூசி, தற்போது அதன் வருகை அதிகரித்துள்ளதால் வரும் வாரத்தில் அரசின் ஒதுக்கீடுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அப்போது மக்களுக்கு எளிதாக ஸ்புட்னிக் - 5 கிடைக்கும்’ என்றார். மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் இதுவரை 34 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் 50 கோடி டோஸ் வரை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Kovit-19 , Free ‘Sputnik-5’ Vaccine Coming Soon In Private Hospital: Govt-19 Team Leader Info
× RELATED இந்தியாவில் முதல் முறையாக...