போச்சம்பள்ளி அருகே பொன்னியம்மன் சிலை மீது படமெடுத்தாடிய நாகப்பாம்பு: பக்தர்கள் சிறப்பு பூஜை

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே பொன்னியம்மன் சிலை மீது நாகப்பாம்பு படமெடுத்தாடியது. இங்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள வேலம்பட்டியில் வேங்கானூர் செல்லும் சாலையில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை பொன்னியம்மன் சுவாமி சிலை மீது நாகப்பாம்பு ஒன்று படமெடுத்தாடியது.

இதனை பார்த்த அவ்வழியாக சென்ற மக்கள் இதுகுறித்து அப்பகுதியினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பலர் இந்த காட்சியை செல்போனில் புகைப்படமும் சிலர் செல்பியும் எடுத்துக்கொண்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: