×

ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லத்தில் அமைச்சர் திரு.சி.வி. கணேசன் ஆய்வு

மாமல்லபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு சொந்தமான மாமல்லபுரத்தில் உள்ள, ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லம் மற்றும் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தொழிற் சங்கப் பிரதிநிதிகள் தங்கி பயன்பெற்று வரும் ஜீவா இல்லம் ஆகியவற்றை மாண்புமிகு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி. கணேசன், அவர்கள்  இன்று (06.07.2021) ஆய்வு மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு  கூடத்தில்  தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் மாண்புமிகு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி. கணேசன் அவர்கள் தலைமையில் 06.07.2021 இன்று நடைப்பெற்றது.  தொழிலாளர் துறை அலுவலர்கள் மேலும் சிறப்பாக செயல்பட கீழ்கண்ட அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளையும் அமைச்சர் வழங்கினார்.

* குறைந்தபட்ச ஊதியசட்டம், வேலையாள் இழப்பீடு சட்டம், பணிக்கொடை பட்டுவாடா சட்டம் மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

• தொழிலாளர் துறையின்கீழ் இயங்கும் தொழிலாளர்  நல  வாரியம்  மற்றும்   18 அமைப்புச் சாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்டுவரும் கல்வி உதவித் தொகை, பாடநூல் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி உதவித் தொகை, ஓய்வில்லங்கள், தொழிலாளர் நல மையம், இயற்கை மரணம் மற்றும் விபத்துமரண ஈமச்சடங்கு உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வாரிய உறுப்பினர்களை விரைவாக சென்று சேர உரிய நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தினார். மேலும் நிலுவையிலுள்ள அனைத்து பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களின் மீதான நடவடிக்கையை  விரைந்து  முடித்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.

* இத்திறனாய்வுக் கூட்டத்தில்  தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலர் திரு. கிர்லோஷ்குமார், இ.ஆ.ப.,, கூடுதல் தொழிலாளர் ஆணையர் (நிர்வாகம்), கூடுதல் தொழிலாளர் ஆணையர் (சமரசம்), கூடுதல் தொழிலாளர் ஆணையர் (ஆய்வுகள்), கூடுதல் தொழிலாளர் ஆணையர், சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையர், கோவை, கூடுதல் தொழிலாளர் ஆணையர், மதுரை, கூடுதல் தொழிலாளர் ஆணையர், திருச்சி, தொழிலாளர் நலவாரிய செயலாளர், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய செயலாளர், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள்  நலவாரிய  செயலாளர் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

Tags : Minister ,CV ,Jawaharlal Nehru Retirement Home Ganesan , Minister Mr. CV at Jawaharlal Nehru Retirement Home Ganesan study
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...