கோயில் நிலத்தில் அங்கன்வாடி மையம் - ஆட்சியர் பதிலளிக்க ஆணை

தூத்துக்குடி: கோயில் நிலத்தில் அங்கன்வாடி மையம் 30 ஆண்டுகள் செயல்பட்டது தொடர்பாக பதிலளிக்க ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பணி புத்தன்தருகை கிராமத்தில் பழுதடைந்துள்ள அங்கன்வாடியை அகற்றி புதிதாக கட்டக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருப்பணி புத்தன்தருகை கிராமத்தில் அங்கன்வாடி உள்ள இடம் கோயிலுக்கு சொந்தமானது என்று எதிர்மனுதாரர் தெரிவித்துள்ளார்.

Related Stories: