×

கொரோனா வவ்வால்களிடம் இருந்து வந்த கிருமியா? லண்டன் மியூசியத்தில் வவ்வால்கள் மீது ஆய்வு

பிரிட்டன்: கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸின் தாக்கம்  இன்னும் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு, ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் தற்போது பாதிப்பின் வீரியம் சற்று குறையத் தொடங்கி உள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தோன்றிய இடம் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை பறக்கும் பாலூட்டிகளான வவ்வால்கள் மூலம் பரவியதாகவும் கூற்று ஒன்று இருக்கிறது.

இது குறித்த ஆய்வுகளை தொடங்கியுள்ளது லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தில் அனைத்து வகை வவ்வால்களையும் சேகரித்து பாடம் செய்து வைத்துள்ளனர். வவ்வால்களில் பல வகைகள் இருந்தாலும் கொரோனா பரவியதாக கூறப்படும் horseshoe, leaf-nosed, Trident ஆகிய வகை வவ்வால்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கின்றன.


Tags : London Museum , The germ that came from the corona bats? Study on bats at the London Museum
× RELATED லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள...