ராஜஸ்தானில் பாலம் ஒன்றில் இருந்து விழுந்த சரக்கு லாரி தீப்பிடித்து எரிந்தது : லாரியில் இருந்து குதித்து இருவர் உயிர் தப்பினர்!!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் பாலம் ஒன்றில் இருந்து விழுந்த சரக்கு லாரி தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெய்ப்பூரில் இருந்து சரக்குகளை ஏற்றுக் கொண்டு லாரி ஒன்று டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. கோட்டுப்பூட்லி என்ற இடத்தின் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தில் இருந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். லாரியில் இருந்த ஓட்டுனரும் உதவியாளரும் கடைசி நேரத்தில் லாரியில் இருந்து குதித்துவிட்டதால் உயிர் தப்பினர்.இந்த தீ விபத்து குறித்து கோட்டுப்பூட்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories:

>