×

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுப்பொலிவு பெறும் சமத்துவபுரங்கள்

சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் சமத்துவபுரமாக ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புள்ளி ஊராட்சியில் உள்ள பங்காருபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறக்கப்பட்டது. அதன் பிறகு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 9 ஒன்றியங்களில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டது.

ஆத்தூர் தொகுதியில் உள்ள சீவல்சரகு ஊராட்சி பெரியார் நினைவு சமத்துவபுரம் முன்னாள் முதல்வர் கலைஞரால் 26.09.1999ம் ஆண்டு 100 வீடுகளுடன் திறந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு 3.02.2010 அன்று சமத்துவபுரங்களில் பெரியார் சிலைகள் வைக்கப்பட்டது. இந்த சமத்துவபுரங்கள் அதிமுக ஆட்சியில் பாழடைந்து போய்விட்டது. சமத்துவபுரத்தில் உள்ள பூங்காக்கள் சமுதாய கூடங்கள் மகளிர் சுய உதவி குழு கட்டிங்கள், தொடக்கப்பள்ளிகள் செயல்படாமல் முடங்கி போனதோடு இடிந்த நிலையிலும் இருந்து வந்தன.

தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் முதல்கட்டமாக சமத்துவபுரங்களை சீரமைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த செயற்பொறியாளர் சேதுராமன், உதவி செயற்பொறியாளர் ஷாஜகான், தலைமையில் பொறியாளர் குழுவை சேர்ந்த உதவி பொறியாளர்கள் தேவி, ராஜாத்தி, பணி மேற்பார்வையாளர்கள் சுமதி, அமுதவள்ளி ஆகியோர் ஆய்வு செய்து பெரியார் நினைவு சமத்துவபுரத்தை சீரமைக்க வேண்டிய பணிகளை மேற்கொண்டனர். ஆய்வின் போது சீவல்சரகு ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜேந்திரன், ஊராட்சி செயலர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Dindigul District , Chinnalampatty, Dindigul,Samathupuram, Newly Innovated
× RELATED இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில்...